சினிமா என்றாலே வயது ஆக ஆக சில நடிகர்கள் விக் வைத்து நடிப்பது வழக்கம் தான். இன்றைய நம்பர் ஒன் நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே அதற்கு விதிவிலக்கு அல்ல. இளம் நடிகர்களும் அவர்களது படங்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப தலைமுடியில் மாற்றம் செய்து, அல்லது சில நேரங்களில் விக் வைத்து நடிப்பதுண்டு, சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான்.
ஆனால் சில நடிகர்களை விக்குடன் சினிமாவில் பார்த்துவிட்டு விக்கில்லாமல் நேரில் பார்த்தால் அடையாளம் தெரியாது. அதில் ஒருவர்தான் நம்ம காமெடி கிங் கவுண்டமணி. கவுண்டமணி ஆரம்ப காலகட்டங்களில் நாடக கலைஞராக இருந்தவர்.
பின்னர் சினிமா வாய்ப்பு கிடைத்தது. பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே படத்தில் கவுண்டமணி பேசிய “பத்த வச்சிட்டியே பரட்ட” என்ற வசனத்தின் மூலம் பிரபலமாகத் தொடங்கினார். அதன் பிறகு கவுண்டமணி தனியாகவும், கவுண்டமணி செந்தில் கூட்டணியாகவும் வெற்றிநடை போட்டு வந்தார்.
கவுண்டமணி சினிமாவில் பிரபலமாக தொடங்கிய காலகட்டங்களிலேயே அவருக்கு தலையில் வழுக்கை விழுந்து விட்டது. கவுண்டமணிதான் நடித்த 75% படங்களில் விக் வைத்துதான் நடித்துள்ளார். இப்படி இருக்கையில் சின்ன கோடம்பாக்கம் என அழைக்கப்படும் கோபிசெட்டிபாளையத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தில் நடித்து வந்தாராம்.
அப்போது அதே படத்தில் பயில்வான் ரங்கநாதன் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு செல்ல ஈரோடு ரயில் நிலையத்தில் வெயிட் செய்து கொண்டிருந்தாராம் கவுண்டமணி. ஆனால் அவரை அடையாளமே தெரியாமல் கடந்து சென்றாராம் பயில்வான்.
இதை பார்த்த கவுண்டமணி, என்னய்யா ரசிகர்களுக்கு தான் விக் இல்லாமல் என்னை அடையாளம் தெரியாது, உனக்குமா என கேட்டு கிண்டலடித்தாராம். அந்த தகவலை சமீபத்தில் ஒரு வீடியோவில் பகிர்ந்து கொண்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
