வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

போட்டோஷூட்டின் போது தவறி விழுந்த ரித்திகா சிங்.. ஈரம் சொட்ட சொட்ட

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இப்படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருப்பார். நிஜ வாழ்க்கையிலும் இவர் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதிச்சுற்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விளையாட்டு வீராங்கனையான இவர் முழுநேர நடிகையாக மாற முடிவு செய்து சினிமாவில் களம் இறங்கினார். ஆனால், ஒரு சில படங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எப்படியாவது முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பதற்காக தற்போது கவர்ச்சி வேடங்களுக்கும் ஒகே சொல்லியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் புடவையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அப்போது போஸ் கொடுப்பதற்காக குளத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்த போது வழுக்கி குளத்தினுள் விழுந்துவிட்டார்.

ritika-video-link
ritika-video-link

இந்த வீடியோ ரித்திகா சிங்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Trending News