வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிக்பாஸ் நடிகருடன் ஜோடி சேர்ந்த குக் வித் கோமாளி பிரபலம்.. வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

தொகுப்பாளராக இருந்து சீரியல் நடிகரான ரியோ ராஜ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஆல்பம் சாங் ஒன்றில் நடித்து வருகின்றனர். இந்த ஆல்பம் சாங்கின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள நிலையில் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.

கண்ணம்மா என்னம்மா என்று தொடங்கும் இந்த பாடலில் ரியோ ராஜ், பவித்ரா மட்டுமின்றி கலக்கப்போவது யாரு புகழ், பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்பாடலை சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் பாடியுள்ளார். ரியோ ராஜ் மற்றும் பவித்ரா ஆகிய இருவரும் தற்போது ஒரு சில புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் இணைந்து ஆல்பம் சாங்கில் நடித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

rio-pavithra
rio-pavithra

Trending News