தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பாலா. பாலா படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் அவருடைய ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்ப்பு என்பது இருந்து கொண்டேதான் இருக்கிறது.
பாலாவின் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வரிசையாக படங்களில் தொடர்ந்து நடிக்க முன்னணி இயக்குனராக உயர்ந்தார். ஆனால் அதன் பிறகு பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் மற்றும் பரதேசி போன்ற படங்கள் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சோபிக்கவில்லை.
அதே கதை தான் கடைசியாக வெளிவந்த தாரை தப்பட்டை மற்றும் நாச்சியார் போன்ற படங்களுக்கும் நடந்தது. இருந்தாலும் பாலா ஏதாவது புதுமையாக செய்வார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் நடிகரான சூர்யா உடன் புதிய கூட்டணி அமைக்க உள்ளாராம் பாலா. கிட்டத்தட்ட 18 வருடம் கழித்து இந்த கூட்டணி இணைய உள்ளது. கடைசியாக பாலா மற்றும் சூர்யா இணைந்து பிதாமகன் என்ற படத்தில் பணியாற்றிய இருந்தனர்.
சூர்யாவின் மனைவி ஜோதிகா பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் நடித்தபோது பாலா சூர்யாவுக்காக ஒரு வரி கதையை கூறி சம்மதம் வாங்கி வைத்திருந்தாராம். சமீபத்தில் மொத்த கதையையும் கேட்டு விட்டு சூர்யா மிரண்டு விட்டாராம்.
இதனால் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளன்று சூர்யா மற்றும் பாலா படத்தின் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர்.
