செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

15 வருடங்களுக்கு பிறகு கேங்ஸ்டர் படத்தை தூசி தட்டும் இயக்குனர்.. சுந்தர் சி-க்கு அடையாளம் கொடுத்த படமாச்சே!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த சுந்தர் சி பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள சுந்தர் சி படங்களில் மேட்டுக்குடி, உன்னைத்தேடி, உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், கிரி, கலகலப்பு, அரண்மனை போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன.

சமீபகாலமாக படங்களை இயக்குவதைவிட நடிப்பதில் கவனம் செலுத்திவரும் சுந்தர் சி பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில் கடந்த 2006ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான தலைநகரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மேலும் இப்படத்தில் நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடிவேலுவின் காமெடிகள் படத்திற்கு ப்ளஸாக அமைந்தது. தலைநகரம் படம் மலையாளத்தில் வெளியான அபிமன்யூ என்ற படத்தின் தழுவல் ஆகும்.

vz durai
vz durai

கேங்ஸ்டர் படமாக வெளியான தலைநகரத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் முதல் பாகத்தை எடுத்த இயக்குனர் சுராஜீக்கு பதிலாக இரண்டாம் பாகத்தை V. Z துரை இயக்க உள்ளார். இவர் அஜித்தை வைத்து முகவரி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சுந்தர் சி அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். எனவே இப்படத்தை முடித்த பின்னர் வரும் அக்டோபர் மாதத்தில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

ஏற்கனவே சுந்தர் சி நடிப்பில் நகரம் மறுபக்கம் என்ற தலைப்பில் வெளிவந்து சரியாக ஓடவில்லை. அந்தப் படத்தின் தோல்வியை சரி கட்டும் விதமாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் இரண்டாம் பாகமாக எடுக்கலாம் என்று முடிவு எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -spot_img

Trending News