சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எஸ் ஜே சூர்யாவுடன் படுக்கையில் யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்

எஸ் ஜே சூர்யாவின் ஆரம்ப காலகட்டங்களில் அவருடன் நடிக்க பல நடிகைகள் பயப்படுவார்கள். காரணம் தன்னுடைய படங்களில் நடிகைகளை ரொமான்ஸ் என்ற பெயரில் வச்சு செய்து விடுவார் என்ற பயம் தான்.

அவரே அதையும் ஒப்புக் கொண்டுள்ளார். நான் ஆரம்பத்தில் படம் எடுக்கும் போது ரசிகர்கள் அந்த ரொமான்டிக் காட்சிகளுக்கு கைதட்டி வரவேற்பளித்ததால் தான் அடுத்தடுத்த படங்களில் அந்த காட்சிகளை வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விட்டேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அந்த எஸ் ஜே சூர்யாவா, இப்போ இருக்கும் இந்த எஸ் ஜே சூர்யா! என்கிற அளவுக்கு தனது படங்களில் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வது, குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி படம் செய்வது என தன்னுடைய ரூட்டை மாற்றி அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

நடிகராக வேண்டும் என சினிமாவுக்கு வந்து எதிர்பாராமல் இயக்குனராக மாறி அதிலும் முத்திரை பதித்து தற்போது சினிமாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார் எஸ் ஜே சூர்யா. சமீபகாலமாக அவரது படங்களுக்கு நல்ல ஒப்பனிங் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அடுத்ததாக எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் கடமையைச் செய் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவின் மனைவியாக யாஷிகா நடித்து வருகிறார்.

sj-suriya-yaashika-aanand-cinemapettai-00
sj-suriya-yaashika-aanand-cinemapettai-00

அந்த படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் எஸ் ஜே சூர்யா உடன் படுக்கையறை ரொமான்ஸில் யாஷிகா நடித்திருக்கும் புகைப்படமும் உள்ளது. இதனால் மீண்டும் எஸ் ஜே சூர்யா தன்னுடைய பழைய பாணிக்கு திரும்பி விட்டாரோ எனவும் ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

sj-suriya-yaashika-aanand-cinemapettai
sj-suriya-yaashika-aanand-cinemapettai

Trending News