சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகனான சௌந்தர்யாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர் விசாகன். அபேக்ஸ் என்ற மருத்துவ நிறுவனத்தின் உரிமையாளர் வணங்காமுடியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான வணங்காமுடியின் பையன் விசாகன் சவுந்தர்யா திருமணம் நடைபெற அரசியல் பிரபலம் ஒருவர் உறுதுணையாக இருந்ததாக கூறுகின்றனர். அவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராம்.
சௌந்தர்யா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து ஏழு வருடங்கள் அவருடன் குடும்பம் நடத்தி ஒரு குழந்தை பெற்றிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன் பிறகுதான் விசாகனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சௌந்தர்யா. விசாகன் சமீபத்தில் ஒரு பெரிய பங்களா வீடு வாங்க ஆசைப்பட்டாராம். இது எப்படியோ விஜய்யின் காதுக்கு சென்றுள்ளது.
இதைக் கேள்விப்பட்ட விஜய் உடனடியாக விசாகனை தொடர்பு கொண்டு தன்னுடைய வீட்டில் அருகே இருக்கும் பங்களா விலைக்கு வர இருப்பதாகவும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை ஏரியா தற்போது காஸ்ட்லியான ஏரியாவாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளார் விஜய்.
அந்த வீட்டை வாங்குமாறு விசாகனுக்கு ஐடியா கொடுத்துள்ளார் விஜய். விஜய்யின் இந்த ஐடியா நல்லாருக்கே என 40 கோடி மதிப்புள்ள அந்த பங்களாவை வாங்கி விட்டாராம் விசாகன். இனி அடிக்கடி ரஜினி விஜய்யின் சந்திப்பு நடைபெறும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
