சினிமாவில் வில்லன் நடிகராக இருந்து ஹீரோவாக மாறி மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்திய சினிமாவில் 70 வயதிலும் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் நடிகராக இருப்பது ரஜினிகாந்த் மட்டும்தான்.
ரஜினிகாந்த் எப்போதுமே தன்னுடைய கேரியரில் புத்திசாலித்தனமாக செய்யும் விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு காலகட்டத்திலும் எந்தெந்த இயக்குனர்கள் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்கள் உடன் தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார்.
அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குனர்களை தன்வசப்படுத்தி அவர்களுக்கும் தன்னுடைய வெற்றிப் படங்கள் மூலம் கேரியரை ஏற்படுத்திக் கொடுத்தவர்.
அதிலும் ரஜினிக்கு ஒரு கட்டத்தில் ஏராளமான பெண் ரசிகைகள் கிடைத்தனர். அதற்கு முழுக்க முழுக்க காரணம் இயக்குனரும் பிரபல நடிகருமான ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய ராஜாதி ராஜா என்ற படம் தானாம்.
ராஜாதிராஜா திரைப்படம் ரஜினியின் சினிமா கேரியரில் செம கமர்ஷியல் வெற்றி படமாக அமைந்தது. அந்தப் படத்தில் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். குறிப்பாக அவரது வெகுளித்தனமான கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உருவாகினர்.
அதன் பிறகுதான் ரஜினியின் படங்களுக்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது என்ற வரலாறு கோலிவுட்டில் உண்டு. நிறைய பேருக்கு ஆர் சுந்தர்ராஜன் ஒரு இயக்குனர் என்பதே தெரியாது.
