தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மொத்தமும் முடிவடையவுள்ளதாம்.
எப்போதுமே விஜய்யின் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கும் போதே அடுத்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர்கள் போன்ற வதந்திகள் கோலிவுட் வட்டாரங்களைச் சுற்றி ரவுண்ட் அடிக்கும். அந்த வகையில் அடுத்ததாக விஜய் தெலுங்கு சினிமா பக்கம் செல்ல உள்ளார் என்கிறார்கள்.
தெலுங்கு சினிமாவின் முக்கிய தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும், அதற்காக பெரும் தொகை சம்பளம் பேசியுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் அந்த படத்தை மகேஷ்பாபுவுக்கு மகரிஷி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த வம்சி பைடிபல்லி என்பவர் இயக்க உள்ளதாகவும் கூறினர்.
விஜய்யின் பிறந்த நாளுக்கு தளபதி 66 அறிவிப்பு வரும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர், ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அதற்கு மாறாக பீஸ்ட் படத்தின் போஸ்டர்களை இணையத்தில் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்தின் இயக்குனர் யார் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் பாடகர் கிரிஷ்.
இவருக்கும் இயக்குனர் வம்சி பைடிபல்லி க்கும் நல்ல நட்பு இருப்பதால் சமீபத்தில் அவரை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்து விஜய்யின் அடுத்தப் படத்திற்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். இதிலிருந்து விஜய் மற்றும் வம்சி பைடிபல்லி இருவரின் படமும் கிட்டத்தட்ட உறுதிதான் என்கிறது கோலிவுட் வட்டாரம். இருந்தாலும் இந்த அறிவிப்பை பிரம்மாண்டமாக வெளியிடலாம் என தயாரிப்பு நிறுவனம் ஐடியா போட்ட நிலையில் இப்படி கசிந்துள்ளது கொஞ்சம் வேதனையை கொடுத்துள்ளதாம். இதனால் காலம் தாழ்த்தபடாமல் விரைவில் தளபதி 66 படத்தின் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.
