“ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் மூலம் அறிமுகமாகி பிரபலமாக வலம் வருபவர் தான் அனிருத் ராமச்சந்திரன். இளம் வயதிலேயே மிகப்பெரிய உயரத்தை அடைந்து இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. 3 ,எதிர்நீச்சல் ,விஐபி, வேதாளம் ,கத்தி ,பேட்டபோன்ற படங்களில் இசையமைத்து இருக்கிறார் .vikatan இணையதளம் அனிருத் ஒரு இன்ஸ்பிரேஷன் என்று பாராட்டி உள்ளது.
இவ்வாறு பலரின் பாராட்டை பெற்ற அனிருத் தற்போது பிரபல இசையமைப்பாளரான மற்றும் பாடகரான” எம்.எம். கீரவாணி” அவர்களின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எம் .கீரவாணி அவர்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் பணியாற்றியவர் ஆவார். அழகன், வானமே எல்லை போன்ற திரைப்படங்களில் இசையமைத்துள்ள இவர் பல விருதுகளையும் பெற்றவர் ஆவார். இவர் அனிருத் அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.

‘ ராஜமவுலி’ இயக்கத்தில் உருவாகும் “ரத்தம் ரணம் ரௌத்திரம்” திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் ,தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளில் வெளியாக உள்ளது .இதில் இசையமைப்பாளராக இருக்கிறார் கீரவாணி.
அப்படத்தில் தமிழில் பாடுவதற்கு அனிருத்தை பரிந்துரை செய்துள்ளார் .அப்போது கீரவாணி அவர்கள் “திறமை ,ஆற்றல், செயல்திறன் மற்றும் அற்புதமான குழு இ…