கொரோனா ஊரடங்கு காலத்தில் பல முன்னணி நடிகைகள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள யோகா செய்து வருகின்றனர். சமீபத்தில் நடிகை மஞ்சிமா மோகன் ஆன்லைன் மூலம் யோகா கற்றுக் கொண்டு யோகா செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்திருந்தார். அதேபோல் நடிகை கீர்த்தி சுரேஷும் யோகா செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார்.
தற்போது இந்த வரிசையில் நடிகை அஞ்சலியும் இணைந்துள்ளார். அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான அங்காடித்தெரு படம் அவரது திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. முதல் இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.
இருப்பினும் ஹீரோவுடன் டூயட் பாடும் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல், எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினர். சமீபத்தில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கி லவ் பண்ணா உட்ரணும் என்ற குறும்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதேபோல் தற்போது மணிரத்னம் தயாரிப்பில் ஒன்பது முன்னணி இயக்குனர்களின் படைப்பில் உருவாகிவரும் நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். அதில் அவர் சர்ஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிந்தபின் என்ற பகுதியில் நடித்துள்ளார். மேலும் அவர் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்து அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அஞ்சலி உங்களுக்கு செம தில்லுதான் என கமெண்டு செய்து வருகின்றனர்.
anjali-yoga