தமிழ் சினிமாவில் நடிகர் முகேஷ் மனைவி ஒரு மாணிக்கம், ஐந்தாம்படை, ஜாதிமல்லி மற்றும் பொன்னர் சங்கர் ஆகிய படங்களில் நடித்துள்ளார் இவர் தமிழை தாண்டி மலையாளத்தில் கிட்டத்தட்ட 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் முகேஷ் நடிகை சரிதாவை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளனர் ஆனால் ஒரு சில ஆண்டுகள் பிறகு இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.
அதன் பிறகு நடிகர் முகேஷ் பரத நாட்டிய கலைஞரான தேவிகாவை திருமணம் செய்து கொண்டார் கிட்டத்தட்ட இவர்கள் 8 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்துள்ளனர். தற்போது தேவிகா நடிகர் முகேஷுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதாவது முகேஷ் உடன் இணைந்து வாழ்ந்த நான் இத்தனை வருடங்களாக அவரை புரிந்துகொள்ள முடியவில்லை எத்தனை வருடங்கள் ஆனாலும் அவரை புரிந்து கொள்ள முடியாது எனவும் மேலும் அவர்மேல் கோபம் ஏதும் இல்லை எனவும் விவாகரத்து என்பது என்னுடைய தனிப்பட்ட நான் எடுத்த முடிவு எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் விவாகரத்துப் பெற்ற பிறகு மிகப்பெரிய கடுமையான சூழ்நிலை சந்திக்க போகிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும் விவாகரத்து விஷயத்தில் அவரைப்பற்றி வன்கொடுமை மற்றும் அரசியல் சம்பந்தமாக எதையும் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் முகேஷ் கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியில் எம்எல்ஏவாகவும் உள்ளார். தற்போது இந்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.