சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நான் செஞ்ச ஒரு தப்பால 35 வருஷ வாழ்க்கை போச்சு.. கண்கலங்கிய ரேவதி

சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் ரேவதி. தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். மலையாள நடிகையான இவரை மண்வாசனை படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு சென்றார் ரேவதி. சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே சுரேஷ் சந்திர மேனன் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

ஆனால் இவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்தே பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குள் இருந்த முக்கிய பிரச்சினையாக பார்க்கப்பட்டது ரேவதிக்கு குழந்தை இல்லை என்பது தானாம்.

இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2002ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவுக்கு வந்த ரேவதி தனது 5 வயதில் மகள் இருப்பதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ரேவதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் டியூப் பேபி என்ற முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். நடிகை ரேவதி 17 வயதிலேயே சினிமாவுக்கு வந்து இருபது வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர். அதுவும் புன்னகை மன்னன் படம் வெளியான பிறகு ரேவதிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருந்த நேரம் அது.

அந்த நேரத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டேன். அந்த தவறை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் என்னுடைய வாழ்க்கை நான் நினைத்த மாதிரி நல்லபடியாக அமைந்திருக்கும் என கூறுகிறார் ரேவதி.

revathi-cinemapettai
revathi-cinemapettai

Trending News