ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அட்லீ,விஜய் கூட்டணியில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கதை கூறும் போது வாக்குவாதத்தில் முடிந்த சம்பவம்

சினிமாவில் நடிகர் நடிகைகள் அவர்தம் விருப்பத்திற்கு இயக்குனர்களின் சில கதைகளை தவிர்ப்பது வழக்கமான ஒன்று. இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் தல அஜித் நடித்த வாலியில் அறிமுகமாகி, கௌதம் மேனமன் இயக்கத்தில் தனது காதல் கணவர் சூர்யா நடித்த காக்க காக்க வரை என தனது முதல் இன்னிங்சை சிறப்பாக ஆடிய நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்ததோடு முடித்து விட்டார்.

36வயதினிலே படத்தில் துவங்கி இரண்டாம் இன்னிங்சை ஆட ஆரம்பித்த ஜோதிகா பெண்ணியம் பேசும் கதைகளுக்கு முக்கியத்தும் வழங்கி வந்தார். இப்படியே ராட்சசி நாச்சியார் ஜாக்பாட் போன்று இவரின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் தந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வந்தார்.

mersal nithya menon

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த படம் “மெர்சல்” முதல் முறையாக 3 வேடங்களில தளபதி அசத்தியிருக்கும் இப்படம் அந்த ஆண்டிற்கான சிறந்த படமாகவும் வந்தது.

இப்படத்தில் தளபதி கேரக்டருக்கு ஜோடியாக பேசப்பட்டவர் ஜோதிகா பிறகு கதையில உள்ள சில காரணங்களுக்காக அந்த படத்தை நிராகரித்தார் என்று செய்தி காட்டு தீயாய பரவி சில ரசிகர்களோ அதற்காக சில கேள்விகளையும் எழுப்பினர்.

இதற்கு அட்லி அந்த நேரத்தில் ஜோதிகா நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்ததால் தான் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என மற்றொரு விளக்கத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அது உண்மை இல்லை கதையில் ஒரு சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அட்லீயிடம் ஜோதிகா வாதாடியுள்ளார். ஆனால் அதை மறுக்கவே இந்த சினிமா  வாய்ப்பு வேண்டாம் என்று விலகி விட்டாராம் ஜோதிகா.

Trending News