வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முரட்டு இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணையும் அதர்வா.. ஜோடியாகும் தேசிய விருது நடிகை!

தமிழில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகத் திகழ்ந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அதர்வா, அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனது தந்தைக்கு இணையாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அதர்வா தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இப்படத்தில் அதர்வாவுடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும், நடிகை ராதிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

அதர்வாவிற்கு ஜோடியாக பிரபல நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த மாதம் தனது அடுத்த படத்தில் அதர்வா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வருகிறது.

மேலும் அடுத்ததாக நடிகர் அதர்வா இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும், நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

atharvaa-paradise
atharvaa-paradise

ஏற்கனவே நடிகர் அதர்வா இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பரதேசி படம் பல விருதுகளை குவித்து இருந்தது. இந்நிலையில் பாலாவுடன் மீண்டும் அதர்வா கூட்டணி வைத்துள்ளதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Trending News