வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தன்னைப்பற்றி வெளியான மீம்.. ஹாயாக ரிப்ளே செய்த அஜித் பட இயக்குனர்

சினிமாவில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து மீம்கள் வெளிவருவது வழக்கமான ஒன்றுதான். சிலர் இதை ஜாலியாக எடுத்துக் கொள்வார்கள், இன்னும் சிலர் இதை கண்டு கொள்வதில்லை. ஆனால் சிலர் மட்டுமே தன்னைப்பற்றி வரும் மீம்களுக்கு பதில் அளித்து வருவார்கள்.

அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்துடன் இயக்குனர் வெங்கட் பிரபுவை இணைத்து இடப்பட்ட கலாய் பதிவுக்கு வெங்கட் பிரபு ரிப்ளே செய்துள்ள பதிவு வைரலாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று நாவலான இதை படமாக எடுப்பது மணிரத்னத்தின் கனவு திட்டமாகும். இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கிவிட்ட நிலையில் சமீபத்தில் இதில் யார் யார் என்னென்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற அப்டேட் வெளியானது.

இந்த கதாப்பாத்திர தேர்வு குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அதிருப்தியும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து நபர் ஒருவர் பொன்னியின் செல்வன வெங்கட்பிரபு எடுத்தா பிரேம்ஜி கேரக்டர நெனச்சி பாரு. என் செலக்சனே பரவால்ல தோணும். என மணிரத்னம் சொல்வது போல காமெடி மீமை பகிர்ந்திருந்தார்.

venkat-prabhu-comment-reply
venkat-prabhu-comment-reply

இந்நிலையில் இதை கண்ட இயக்குனர் வெங்கட்பிரபு இதற்கு கேஷுவலாக ‘ஹா.. ஹா.. ஹா.. அடப்பாவிகளா’ என பதில் ட்வீட் பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் அனைத்துப் படங்களிலும் அவரது தம்பி பிரேம்ஜிக்கு நிச்சயம் ஒரு கதாபாத்திரம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இதை கருத்தில் கொண்டுதான் இந்த மீமை தயார் செய்துள்ளார்கள்.

Trending News