புதன்கிழமை, ஜனவரி 15, 2025

காட்டிய கவர்ச்சிக்கு குவியும் பட வாய்ப்பு.. விஜய் டிவியை ஓரம் கட்டிய குக் வித் கோமாளி பிரபல நடிகை

பிரபல சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே தொடரில் நடித்து வந்தார். இவர் இதற்கு முன்பே முள்ளும் மலரும், மின்னலே உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். இருப்பினும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலமே மக்கள் மத்தியில் பிரபலமானார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தர்ஷா மற்றும் புகழ் காம்போ மிகவும் பிரபலமாக இருந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனினும், சில வாரங்களில் தர்ஷா நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகிவிட்டார். ஆனால் தொடர்ந்து அவர் பிரபலமாகவே இருந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னரும் செந்தூரப்பூவே சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் திடீரென தர்ஷா குப்தா விஜய் டிவியில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் காரணமாக தற்போது தர்ஷாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருவதால் விஜய் டிவி சீரியலில் இருந்து தர்ஷா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரெளபதி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மோகன் மீண்டும் ரிச்சர்ட்டை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ருத்ர தாண்டவம் என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அதேபோல் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் ஒன்றில் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக தர்ஷா நடிக்க உள்ளார். இதன் காரணமாகவே அவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

dharsha-cienmapettai-2
dharsha-cienmapettai-2

ஏற்கனவே படவாய்ப்பு காரணமாக குக் வித் கோமாளி பிரபலம் புகழ் விஜய் டிவியில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது தர்ஷாவும் விலகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News