ஒரு நீண்ட இடைவேளைக்கு பின்பு ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகர் சக்தி. முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பி .வாசுவின் மகன் தான் சக்தி வாசுதேவன். சமீப காலமாக எந்த ஒரு திரையிலும் தோன்றாத அவர் தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
சக்தி தன்னுடைய உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான அவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இருப்பினும் அவை அதிக அளவு வெற்றி பெறவில்லை.
பிரபலமாக இருப்பவர்கள் வெற்றியடைந்த அளவிற்கு அவர்களுடைய வாரிசுகள் வெற்றிக்கனியை அவ்வளவு எளிதாக ருசிக்க முடியவில்லை. இந்த வகையில் பி வாசு சிறந்த இயக்குனர், கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்கள் கொண்டவர் இருப்பினும் அவர் மகன் சக்தி பெரிய அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை.
இருப்பினும் சக்தி விடாமல் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டார். இது குறித்து தற்போது ஒரு பேட்டியில் பிக் பாஸ் வீட்டில் என்னை கெட்டவனாகவும் ஓவியாவை நல்லவராகவும் சித்தரித்து விட்டனர்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதிக வாய்ப்புகள் என்னை தேடி வரும் என்று எண்ணினேன். ஆனால் அது அனைவருக்கும் சாத்தியமில்லை என்று புரிந்தது. தற்போது தனது உடல் எடையை 12 கிலோ குறைத்து புதிதாக ஒரு திரைப்படத்தில் வில்லனாக மிரட்ட தயாராகிறார் சக்தி.
பல பட வாய்ப்புகளை தவற விட்டதால் தற்போது தன்னுடைய உடல் அமைப்பில் கவனம் செலுத்தியுள்ளதாக கூறியிருக்கிறார். நான் கிட்டத்தட்ட 12 படத்தை மிஸ் பண்ணிட்டேன் என்றும் அந்த வரிசையில் எட்டு படங்கள் ஹிட் ஆனது.
களவாணி, ஆயிரம் விளக்கு, தம்பிக்கோட்டை, நெஞ்சிருக்கும்வரை போன்ற படங்களின் வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டதாக தெரிவித்திருக்கிறார். தற்போது ஒரு படத்தில் முன்னணி நடிகருக்கு வில்லனாக நடித்து வருவதாக மேலும் மற்றொரு படத்திலும் முற்றிலும் மாறுபட்ட feminse ரோலில் நடிப்பதாகவும், இதை ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.