தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிகர்களை வைத்து படங்களை இயக்கி அதற்கான வாய்ப்புகளை பெற்றார்.
அதன்பிறகுதான் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் என்னும் படத்தை இயக்கினார் இப்படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வெற்றிபெறவில்லை. அதன் பிறகு தற்போது விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் காத்துவாக்குல இரண்டு காதல் என்னும் படத்தை இயக்கிவருகிறார்.
இப்படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் படங்களை இயக்குவதை தாண்டி தற்போது ஒரு சில படங்களை தயாரித்தும் வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து சிறு பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தயாரித்து பலருக்கும் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.
இவர்கள் தயாரித்த முதல் படமான கூழாங்கல் தற்போது சர்வதேச அளவில் முதல் விருதை பெற்றுள்ளது. இதனை அவர்களது சமூக வலைதள பக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் விருது வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் விக்னேஷ் சிவன் இயக்குனர் பி எஸ் வினோத் அடுத்ததாக ரோமானியாவில் நடக்கும் சர்வதேச விருது விழாவில் கோலங்களும் படத்தை வெளியிட்டு விருது வாங்கும் முயற்சியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களின் கதைகளை கேட்டு வருவதாகவும் விரைவில் ஒரு சில படங்களை தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கூறியுள்ளனர். நயன்தாரா ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல் விக்னேஷ் சிவன் படங்களையும் இயக்கி வருகிறார். தற்போது இவர்கள் தயாரித்த குளங்கள் படம் விருது பெற்றதையடுத்து பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.