வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஜிபி முத்துவுக்கு விஜய் டிவி கொடுத்த ஆஃபர்.. இந்த ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்

டிக் டாக் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது ஜிபி முத்து தான். ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் சமீபகாலமாக ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று பெரிய பிரபலமாகிவிட்டார்.

சமீபத்தில் ஜிபி முத்து தொடங்கிய யூடியூப் சேனல் விரைவில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை தொடவுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஜி பி முத்துவுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

இதனால் அவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே விஜய் டிவி தொகுப்பாளர்கள் பலரும் ஜி பி முத்துக்கு ரசிகர்களாக இருப்பதால் அவரை வைத்து டிஆர்பி பெற முடிவு செய்துள்ளது விஜய் டிவி.

அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களான குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளில் ஏதேனும் ஒன்றில் ஜிபி முத்து கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது விஜய் டிவி வட்டாரம்.

அதில் பெரும்பாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் இந்த முறை கடந்த சீசன்களில் நல்ல வரவேற்ப்பை பெற்ற புகழ் மற்றும் சிவாங்கி இருவருமே இடம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஜிபி முத்துவை களமிறங்கி அவருக்கு ஒரு கேரியரை உருவாக்கிக் கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். இதற்கு விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் பலரும் ஜி பி முத்துக்கு சப்போர்ட் செய்துள்ளதாக கூறுகின்றனர். இதனால் விரைவில் ஜிபி முத்து விஜய் டிவியின் சொத்தாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

gp-muthu-cinemapettai
gp-muthu-cinemapettai

Trending News