1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை ராதிகா. அந்த படத்தில் நடித்த சுதாகர் மற்றும் ராதிகா ஜோடி பெரிய அளவு பெயர் வாங்கியதால் தொடர்ந்து பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
அதன்பிறகு விறுவிறுவென முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த ராதிகா அன்றைய காலகட்டங்களில் சூப்பர் ஸ்டார் நடிகர்களாக இருந்த ரஜினி, கமல் என அனைவருடனும் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தார்.
இடையில் இயக்குனர் மற்றும் நடிகர் பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து வெளிநாட்டு வாழ் நபரை 2-வது முறையாக திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார்.
அதன் பிறகு சில வருடங்கள் திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் கேரியரில் கவனம் செலுத்தி வந்த ராதிகா கடைசியாக 2001-ம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு தற்போது வரை அவருடன் வாழ்ந்து வருகிறார்.
ராதிகா காலகட்டங்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய கதாபாத்திரங்களை மாற்றி மாற்றி நடித்ததால் தான் கிட்டத்தட்ட 43 வருடங்கள் தமிழ் சினிமாவில் நிலைக்க முடிந்தது என்கிறார் கள் கோலிவுட் வாசிகள். ஒரு காலத்தில் கதாநாயகியாக கலக்கிய ராதிகா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் மிரட்டி வருகிறார்.
இன்று தமிழ் சினிமாவில் உருவாகும் பெரும்பாலான படங்களில் ராதிகாவுக்கு முதன்மையான கதாபாத்திரம் கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரே வாரத்தில் சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு, அருண் விஜய் உடன் AV31 மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் மாறி மாறி நடித்துள்ளார். தற்போதைக்கு அதிக சம்பளம் வாங்கும் குணச்சித்திர நடிகையாக இருப்பது இவர்தானாம்.