வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஒரே ஒரு கில்மா சீன் தான்.. அஞ்சலியை தேடி வந்து வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்

சமீபகாலமாக சினிமாவை விட்டு விலகியிருந்த நடிகைகள் அனைவருமே தங்களுடைய திறமைகளை வெப் சீரிஸ் மூலம் காட்டி மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அஞ்சலியும் தற்போது சினிமாவில் கணிசமாக படவாய்ப்புகளை பெற்று வருகிறார்.

2002ஆம் ஆண்டு களஞ்சியம் இயக்கிய சத்தமின்றி முத்தமிடு படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்துதான் தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அவருக்கு ஒரு திருப்புமுனை அமைந்தது.

அதன்பிறகு அங்காடித் தெரு, எங்கேயும் காதல் போன்ற படங்களில் அஞ்சலியை ரசிகர்கள் அதிகம் விரும்பினர். இப்படி பரபரவென முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் திடீரென சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்து காரணமாக அஞ்சலி தலைமறைவானார்.

சில வருடங்கள் சினிமா பக்கமே எட்டிப்பார்க்காத அஞ்சலி அந்த குறிப்பிட்ட கால கட்டங்களில் உடல் எடை கூடி பார்ப்பதற்கே ஆண்டி போல மாறினார். இதனால் இரண்டாம் கட்ட நடிகைகள், ஒரு பாடலுக்கு நடனம் என அவரது கேரியர் கேள்விக்குறியானது.

ஆனால் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் தயாரித்த பாவ கதைகள் என்ற வெப்சீரிஸ் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் பல படவாய்ப்புகளை பெற்று வருகிறார். அதற்கு காரணம் அதில் இடம்பெற்ற அஞ்சலியின் அதீத கவர்ச்சி சீன்தான்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நயாட்டு என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கிய அல்லு அர்ஜுன் இந்த படத்தில் அஞ்சலி நடித்தால் சரியாக இருக்கும் என அவருக்கு சிபாரிசு செய்துள்ளார்.

anjali-cinemapettai
anjali-cinemapettai

Trending News