புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எனக்கு ஏன் கதை சொல்லல எனக் கேட்ட விஜய்.. அதுக்கு நான் தூக்குலதான் தொங்கணும் என கலாய்த்த மிஷ்கின்

தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பல படங்களில் முதலில் விஜய் நடிக்க இருந்து பின்னர் அது பல ஹீரோக்களின் கைமாறி சென்றது நடந்துள்ளது. அந்த வகையில் மிஷ்கின் பட வாய்ப்பும் அப்படி கை நழுவிச் சென்றுள்ளது.

விஜய்யின் யூத் போன்ற படங்களில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்தவர் தான் மிஸ்கின். விஜய்யுடன் நெருங்கிய நட்பில் இருந்ததால் அவருக்காக ஒரு கதையை ரெடி செய்தாராம். அந்தப் படம்தான் சித்திரம் பேசுதடி.

ஆனால் அந்த படத்தின் போது விஜய்யின் இமேஜ் ஆக்சன் ஹீரோ ரேஞ்சுக்கு இருந்ததால் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு நடிகர் நரேனை வைத்து இந்த படத்தை எடுத்து முடித்தார் மிஸ்கின்.

படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் அடைந்ததை கேள்விப்பட்ட விஜய், எனக்கு ஏன் இந்த கதையை சொல்லவில்லை என மிஷ்கினிடம் செல்லமாக கோபித்துக் கொண்டாராம். அதற்கு மிஷ்கின் கொடுத்த பதில்தான் விஜய்யுடன் மிஸ்கின் இவ்வளவு நெருக்கமானவரா என யோசிக்க வைத்தது.

சித்திரம் பேசுதடி படத்தை பார்த்துவிட்டு விஜய் கேட்ட கேள்விக்கு மிஸ்கின், நான் இந்த கதையை உங்களிடம் சொல்லிருந்தால் உங்களுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தனும், அப்புறம் உங்க அப்பாவுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தனும் கடைசியில நான் தூக்குல தொங்கணும், அதனாலதான் உங்க கிட்ட சொல்லல என ஜாலியாக கிண்டலடித்தாராம் மிஸ்கின்.

விஜய் சித்திரம் பேசுதடி படத்தை மிஸ் செய்து விட்டதாக நிறைய முறை மிஷ்கினிடம் சொல்லி வருத்தப்பட்டதாகவும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். எப்போதுமே தளபதி விஜய்யிடம் கதை சொல்லப்போகும் இயக்குனர்களிடம் தனக்கு ஏற்றபடி சில மாற்றங்களைச் செய்யச் சொல்வாராம் தளபதி.

vijay-myskkin-cinemapettai-01
vijay-myskkin-cinemapettai-01

Trending News