வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய் – தோனி சந்திப்பால் வயிறு எரிந்த விக்னேஷ் சிவன்.. ட்ரெண்டாகும் ட்விட்டர் பதிவு.

கோலிவுட் வட்டாரம் முழுவதும் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது விஜய் மற்றும் தோனி சந்திப்பு தான். ஒரே இடத்தில் தல – தளபதி சந்திப்பு நிகழ்ந்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சந்திப்பு குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இணைந்துள்ள பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

vignesh shivan
vignesh shivan

இந்நிலையில், புதிய விளம்பரப் படத்திற்காக சென்னை வந்துள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி, நடிகர் விஜய்யை சந்தித்து பேசி உள்ளார். தோனி நடிக்கும் புதிய விளம்பர படப்பிடிப்பும், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பும் கோகுலம் ஸ்டுடியோஸில் நடைபெற்றதால் பீஸ்ட் படப்பிடிப்பிற்குச் சென்று விஜயை சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் , நெல்சன் திலீப்குமாரும், தோனி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னிடம் ஏன் கூறவில்லை என்பது போல் நகைச்சுவையாக பதிவு ஒன்றை செய்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது,”ஒரு வார்த்த சொல்லிருக்கலாம். இப்போது வயிறு 247 டிகிரி செல்ஷியஸில் எரிந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படத்தின் ஒரிஜினலை எனக்கு அனுப்பி வையுங்கள் நெல்சன் திலீப்குமார். அதில் என்னை வைத்து போட்டோஷாப் செய்தாவது ஆறுதல் அடைந்துகொள்கிறேன்” என்று நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

Trending News