வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

நெல்சன் இடத்தை பிடித்த விக்னேஷ் சிவன்.. பொறாமையில் பொங்கி வெளியிட்ட புகைப்படம்

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் தல தோனி சென்னையில் ஒரு சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்திருந்தார். அதே சமயத்தில் அதே ஸ்பாட்டில் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் சூட்டிங்கில் இருந்த தளபதி விஜயும் சந்திக்க நேர்நதது செய்தியும் புகைப்படங்களும் பெரும் வைரலானது.

நெட்டிசன்கள் பலரும் தலதளபதி சந்திப்பு என தலைப்பிட்டு பதிவேற்றி கொண்டாடி வரும் புகைப்படங்களில் தல தோனி மற்றும் தளபதி விஜய் மட்டும் இருந்து வருகின்றனர். சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களிலும் தல தளபதி மட்டும் இருக்க.

அதனை தொடர்ந்து தளபதி தல தோனி மற்றும் இயக்குனர் நெல்சன் இணைந்து எடுத்துக்கொண்ட படங்கள் பல்வேறு சமூக வலைகளிலும் நெல்சனின் முகத்திற்கு பதிலாக மற்றவர்களின் புகைப்படங்களோடு நெட்டிசன்கள் பலராலும் எடிட் செய்யப்பட்டு அப்லோட் செய்யப்படுகிறது.

vignesh shivan
vignesh shivan

அத்தகைய ஒரு எடிட்டிங்கில் இயக்குனரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனும் பதிவிட்டுள்ளார். தல தளபதி காம்போவுடன் நான் என குறிப்பிடப்பட்டுள்ள அப்புகைப்படத்தில் நெட்டிசன்கள் பலரும் அவர்தம் கமாண்டுகளால் நிறைத்து வருகின்றனர்.

Trending News