வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தேசிய விருதுக்கு பின் குவியும் பட வாய்ப்புகள்.. கீர்த்தி சுரேஷ் கைவசம் இத்தனை படங்களா.?

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படம் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இருப்பினும் இப்படம் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இதனை அடுத்து இரண்டாவதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் மூலமாகவே இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்தில் ஜோடி சேர்ந்தார். பின்னர் விஜயுடன் சர்க்கார், விக்ரமுடன் சாமி 2, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கி முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.

இவ்வாறு சாதாரண கதாபாத்திரங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷிற்கு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மகாநதி என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார்.

இதனையடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார். தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்க்காரு வாரி பட்டா என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர பல தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது கீர்த்தி சுரேஷிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இவர் ஒப்பந்தமாகியுள்ள புதிய படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ரஜினியின் அண்ணாத்த படத்திலும், இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

keerthy suresh mahesh babu
keerthy suresh mahesh babu

மேலும் மலையாளத்தில் வாசி என்னும் படத்திலும், தெலுங்கில் ஆதி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர அவர் மலையாளத்தில் நடித்த அரபிக் கடலின் டே, தெலுங்கில் நடித்த குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

Trending News