நயன்தாராவுக்கு எப்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதோ அப்போதிலிருந்தே முன்னணி நடிகர்களை மதிப்பதே இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே கோலிவுட் வட்டாரங்களில் காதைக் கடித்தது.
தற்போது 65 வயது நடிகரின் விஷயத்தில் அது உறுதியாகி விட்டதாக கூறுகின்றனர். தமிழ் சினிமாவில் தற்போதைக்கு நம்பர் 1 நடிகை நயன்தாரா தான். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் அந்த இடம் கிடைத்த பிறகு அவரது நடவடிக்கையில் ஏகப்பட்ட மாற்றமாம்.
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் நன்றாக இருந்தாலும் ஜவ்வாக இருக்கிறது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாராவோ அவ்வப்போது மற்ற மொழிகளிலும் தலைகாட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிரஞ்சீவி நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படம் வெளியானது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
அந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கு படங்களைப் பொறுத்தவரை ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு தெலுங்கு சினிமாவை வைத்து இருந்த அனைத்து நடிகர் நடிகைகளும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.
அப்படி இருக்கையில் நயன்தாரா எந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை என்ற ஒரு பேச்சு இருக்க சிரஞ்சீவி தானாகவே முன்வந்து நயன்தாராவுக்கு போன் செய்து ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் கடைசிவரை வருகிறேன் வருகிறேன் என ஏமாற்றிவிட்டாராம். இதனால் கடுப்பான சிரஞ்சீவி, நான் எவ்வளவு பெரிய ஆள், என்னையே மதிக்கல என நயன்தாரா மீது செம கடுப்பில் இருக்கிறாராம்.