சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அந்நியன் போல் மாறி மாறி பேசி வெறுப்பேற்றிய மீரா மிதுன்.. கடும் கோபத்தில் போலீஸ் எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளவர் மீரா மிதுன். இவர் சமீபகாலமாக பல தரப்பினர் மீது பல்வேறு விதமான புகார்களை முன்வைத்து பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனால் தற்போது மீராமிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரா மிதுன் சமீபகாலமாக அளவுக்கு மீறி பேசுவது தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது என தைரியமாக பேசிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். மேலும் சக நடிகர்களை பற்றியும் அவதூறாக பேசி இருந்தார். அப்போது கூட ரசிகர்கள் பலரும் மீரா மிதுன் கடுமையாக திட்டி தீர்த்தனர்.

ஆனால் மீரா மிதுன் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் தவறாக சித்தரித்து படங்களை எடுப்பதாகவும் ஒரு சில நடிகர்கள் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும் கூறினார். இதனால் சமூக வலைகளில் கடுமையான விவாதம் ஏற்பட்டது.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மற்றொரு தரப்பினர் மீரா மிதுன் கைது செய்ய வேண்டும் என புகார் அளித்தனர். அதனால் கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தன்னை யாரேனும் கைது செய்தால் கத்தியால் குத்திக் கொள்வேன் என பேசிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

meera-mithun-after-biggboss
meera-mithun-after-biggboss

அதன்பிறகு போலீசார் தன்னை கொடுமை படுத்துவதாகவும் கொஞ்சமும் சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்வதாகவும் கூறினார். தற்போது மீரா மிதுன் போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பதில்லை சொன்ன பதிலை திரும்ப சொல்லி வருவதாகவும் மனரீதியாக இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதனால் மனநல மருத்துவரின் உதவியுடன் இவரை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். தற்போது போலீஸார் மீரா மிதுனை விசாரித்து வருகின்றனர்.

Trending News