சினிமாவிற்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறதோ அதேபோல விளையாட்டு வீரர்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. தனக்குப் பிடித்த விளையாட்டு வீரர் எது செய்தாலும் ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொண்டுதான் வருகிறார்கள். குறிப்பாக அவர்கள் எந்த விளம்பர நிகழ்ச்சியில் நடிக்கிறார்களோ அதை சம்பந்தப்பட்ட பொருட்களை மட்டுமே ரசிகர்கள் ஆர்வமாக வாங்குவார்கள். அந்த அளவிற்கு தனக்கு பிடித்த விளையாட்டுவீரர்கள் மீது அளவு கடந்த அன்பை வைத்துள்ளனர்.
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த நட்சத்திர கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஆரம்ப காலத்தில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு முறை அவரும் அவரது நண்பரும் சிறுவயதில் பிரபல கால்பந்து பயிற்சியாளரிடம் சேர்ந்துள்ளனர். அப்போது இந்த ஒரு கோல் யார் அடிக்கிறீர்கள் அவர்கள் என்னுடைய கால்பந்து விளையாட்டு பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் நண்பர் தான் கோல் அடிக்க வேண்டியவர். ஆனால் அவரது நண்பர் கிறிஸ்டினோ ரொனால்டோக்கு கோல் அடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். இதன் மூலம் தான் கிறிஸ்டினோ ரொனால்டோ பிரபல கால்பந்து பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றுள்ளார். இதனை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
![cristiano ronaldo](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/cristono-ronldo.jpg)
சமீபத்தில் கூட கிறிஸ்டினோ ரொனால்டோ பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் போது அவருக்கு அருகில் கொக்கோ கோலா பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓரம் தள்ளிவிட்டு கொக்ககோலா குடிக்காதீர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கிரிஸ்டியனோ ரோனல்ட செய்த ஒரு செயலால் கொக்கோ கோலா கம்பெனிக்கு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது.
சிறிது புகழ்பெற்றார் போதை தலைக்கேறி உடம்பு முழுக்க டாட்டூ குத்துவது பிரபலங்களின் வழக்கமாக தற்போது உள்ளது. ஆனால் கிறிஸ்டினோ ரொனால்டோ இதுவரைக்கும் அவரது உடம்பில் எந்த ஒரு டாட்டூவும் குத்த வில்லையாம்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ வருடத்திற்கு ஒரு முறை ரத்தத்தை தானம் செய்வார். உடலில் டாட்டூ குத்தி விட்டால் 6 மாதத்திற்கு எந்த ஒரு ரத்தமும் கொடுக்க முடியாது என்பதற்காகவே தற்போது வரை அவரது உடலில் டாட்டூ குத்த வில்லையாம் தற்போது பல வீரர்களுக்கும் இவர் முன்மாதிரியாக இருக்கிறார்.
கிறிஸ்டினோ ரொனால்டோ மதுப்பழக்கம் இல்லாதவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதுமட்டுமில்லாமல் தனது தந்தை மது குடித்து தான் இறந்து போனார் என்பதால் தற்போது வரை மது பாட்டிலை தொட்டது கூட இல்லையாம் ரொனால்டோ.