ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கைது செய்யுங்கன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன், உடனே தூக்கிட்டீங்க.. விட்ருங்க ப்ளீஸ் என ஜெயிலில் கதறும் மீரா மிதுன்

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா ஆட்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே பிடிக்காத பெண்ணாக மாறிவிட்டார் மீரா மிதுன். தான் ஒரு சூப்பர் மாடல் என அத்துமீறி நடந்து கொண்டார்.

மேலும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக கருதப்படும் விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் குடும்பத்தைப் பற்றியும் அவர்களது மனைவியைப் பற்றியும் தரக்குறைவாக பேசி சர்ச்சையில் சிக்கினார்.

மேலும் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து கொண்டு படு கேவலமான செயல்களை செய்து அதைப் புகைப்படமாக எடுத்து வெளியிட்டு வந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதோடு சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தரக்குறைவாக பேசினார் மீரா மிதுன்.

பேசியதோடு மட்டுமல்லாமல் முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள் என சவாலும் விட்டார். சவால் விட்ட அடுத்த நாளே தமிழக காவல்துறையினர் அவரை கேரளாவில் வைத்து கைது செய்து தரதரவென இழுத்து வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அவரை விசாரிக்கையில், நான் எல்லாமே தெரியாம சொல்லிட்டேன், என்ன விட்டுருங்க என கதறி கொண்டிருக்கிறாராம். இனிமேல் நான் வீட்டை விட்டு வெளியே கூட வர மாட்டேன் என கூறி காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் சும்மா விடுவார்களா தமிழ்நாடு காவல்துறையினர், அவர்களது ஈகோவை டச் செய்தால் என்னாகும் என்பதை காட்டுவார்கள் அல்லவா. மீரா மிதுன் மீது போதைப் பொருள் விவகாரம் முதற்கொண்டு பல வழக்குகளை போட்டு மொத்தத்துக்கும் சேர்த்து வைத்து செய்யப் போகிறார்கள்.

meera-mithun-cinemapettai-01
meera-mithun-cinemapettai-01

Trending News