புதன்கிழமை, ஜனவரி 15, 2025

செல்வராகவன் சொன்ன பொய்க்கு ஒத்து ஊதிய திரௌபதி இயக்குனர்.. இணையத்தில் கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படம்தான் இவர் இயக்கத்திலேயே வெளியான அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.

ஆகையால் இந்த படம் வெளியாகும் போது, இந்தப் படத்தின் உண்மையான பொருட்செலவு 18 கோடி தானாம். ஆனால் படத்தை மிகைப்படுத்துவதற்காக 32 கோடி என பொய் சொல்லி உள்ளார் செல்வராகவன்.

அப்படி சொன்னது பெரும் முட்டாள்தனம் என்று தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ஏனென்றால் இந்த ட்விட்டர் பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆனால் இதற்கெல்லாம் மாறாக திரௌபதி இயக்குனர் மோகன், ‘100 கோடி, 200 கோடி, 500 கோடி என பெரிய பட்ஜெட் படம்., பெரும் வசூல் மழை.. என்று சொன்னால்தான் தரமான படம் என சொல்லுவார்கள்.

சில லட்சங்களில் தயாரிக்கும் படங்களுக்கு மதிப்பு இருக்காது என்ற எண்ணம் மாற வேண்டும். சில கோடிகளில் தயாரிக்கும் படங்களும் வெற்றி பெறும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும்’ என செல்வராகவனின் ட்விட்டர் பதிவிற்கு சப்போர்ட்டாக பேசியுள்ளார்.

எனவே இயக்குனர் மோகனின் இந்தப்பதிவிற்கு ரசிகர் ஒருவர், ‘நீயும் இயக்குனர் என்பதால் செல்வராகவன் சொல்ல பொய்க்கு ஒத்து ஊதுரியா!’ என்று கொஞ்சம் காட்டமாக கமெண்ட் அடித்துள்ளார்.

Trending News