விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். அதுவும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலுக்கு இல்லத்தரசிகள் பலர் ரசிகைகளாக உள்ளனர். காரணம் பாசம் மிகுந்த 4 அண்ணன் தம்பிகளை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் குமரன் தங்கராஜ் நடித்து வருகிறார். முன்னதாக இவருக்கு ஜோடியாக இத்தொடரில் மறைந்த சின்னத்திரை நடிகை விஜே சித்ரா முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவர்கள் இருவரின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இவர்கள் இருவருக்கென தனியாக ஃபேன் பேஜ்ம் உருவாக்கி இருந்தார்கள்.
ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த ஆண்டு இறுதியில் விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவரது கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை காவியா நடித்து வருகிறார்.
இத்தொடரில் குமரனின் நடிப்பு அனைவராலும் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக அவரது ரியாக்ஷன்ஸ் மற்றும் எக்ஸ்பிரஸன்ஸ் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுள்ள குமரன் தற்போது சிறந்த பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குமரன் தனது நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்து வருவார். இது மட்டுமின்றி அவ்வபோது, மனதுக்கு நெருக்கமான பாடல்களை தனது சொந்த குரலில் பாடி பதிவேற்றி வருகிறார்.
அந்தவகையில், தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்ற பாடலை பாடி, இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் குமரனுக்கு தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.