செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்போகிறேன்.. பகீர் கிளப்பிய விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர்

தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குனர் என பெயர் எடுத்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இதுவரை 70 படங்களை இயக்கியுள்ள எஸ் ஏ சந்திரசேகர் பெரும்பாலான படங்களில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார்.

விஜயகாந்த் மற்றும் ஏ எஸ் ஏ சந்திரசேகர் கூட்டணி என்றாலே வெற்றிதான் எனும் அளவுக்கு அவரது படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தன. ஆனால் கடந்த சில வருடங்களாக படம் இயக்குவதை கைவிட்டுவிட்டு விஜய்யின் வளர்ச்சியில் உறுதுணையாக இருந்தார் எஸ் ஏ சந்திரசேகர்.

ஒருகட்டத்தில் விஜய்க்கு எந்த மாதிரி படங்கள் நடிக்க வேண்டும் என ஆலோசனை சொல்வதிலிருந்து விஜய்யின் படங்களுக்கு கதை கேட்பது, விஜய் யாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது என விஜய்யின் ஆசானாக வலம் வந்தார்.

ஆனால் கடந்த சில வருடங்களாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையில் பிரச்சனை என்பது உலகறிந்ததே. இதுகுறித்து சந்திரசேகர் பல பேட்டிகளில் விஜய்க்கு நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன், ஆனால் என்னிடமே கோபித்துக் கொண்டார் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் விரைவில் ஒரு யுடியூப் சேனல் ஒன்றை தொடங்க உள்ளாராம். இதில் பல உண்மைகளை உடைக்க போகிறேன் எனக் கூறியது விஜய் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் இருவருக்குமான பிரச்சினைகளைப் பற்றிப் பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் அங்கு யூடியூப் சேனலில், தன்னுடைய வாழ்க்கை வரலாறு பற்றி கூறப்போவதாக வும், அது சினிமாவில் சாதிக்க நினைக்கும் புதுமுக நடிகர் நடிகைகள் அனைவருக்குமே புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் எல்லோருமே எதிர்பார்ப்பது விஜய் எஸ் ஏ சந்திரசேகர் பஞ்சாயத்தை பற்றி கேட்கத்தான் என்பது அவருக்கே தெரியும்.

vijay-sa-chandrasekar-cinemapettai
vijay-sa-chandrasekar-cinemapettai

Trending News