மூத்த நடிகர்கள் பலரும் சினிமாவில் சாதிப்பது என்பது அரிதான விஷயம்தான். அதிலும் ஹீரோவாக வெற்றி பெறுவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படியே நடித்தாலும் மாஸ் படங்கள் பண்ண முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
இப்படி ஆயிரம் கேள்விகள் அடுக்கினாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தனி ரகம். சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 40 வருடங்களான நிலையிலும் இன்னும் தன்னுடைய நம்பர் 1 இடத்தை விட்டுக் கொடுக்காமல் போராடி வருகிறார்.
இந்த வயதிலும் ரஜினி நடிக்கும் ஒவ்வொரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு என்பது இரட்டிப்பாக்கித்தான் இருக்கிறது. அந்த வகையில் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது.
ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே முடிக்கப்பட்டன. இந்நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்த் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அரசல் புரசலாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த சமயத்தில் ஒரு விஷயத்தை செய்யாமல் விட்டுவிட்டோமே என கவலையில் இருக்கிறாராம் ரஜினிகாந்த். அது வேறொன்றும் இல்லை. எப்போதுமே ரஜினிகாந்த் ஒரு படம் முடித்த பிறகு சில நாட்கள் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுத்து வருவது வழக்கம்.
அப்படி சென்று வந்தால் தன்னுடைய படங்கள் வெற்றி பெறும் என்பது அவருடைய சென்டிமென்ட். ஆனால் தற்போது கொரானா பிரச்சனை அதிகமாக இருப்பதால் இமயமலை செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தனிமையில் இருந்து வருகிறாராம் ரஜினிகாந்த். என்னதான் தனியாக இருந்தாலும் இமயமலை போல் வராது என யோசித்துக் கொண்டிருக்கிறாராம் ரஜினிகாந்த்.