விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல சீரியல்கள் தற்போது வரை 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியலாக உள்ளது. அந்த வரிசையில் கனா காணும் காலங்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், காதலிக்க நேரமில்லை மற்றும் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்கள் அடங்கும். இதில் காதலிக்க நேரமில்லை தொடர் தற்போது வரை இளைஞர்களுக்கு பிடித்த காதல் தொடராக இருந்து வருகிறது.
இந்த தொடர் மட்டுமின்றி இதில் நடித்துள்ள நடிகர்களும் 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தான். அதுவும் குறிப்பாக இந்த தொடரில் வரும் டைட்டில் சாங் பலரது ரிங்டோனாக ஒலித்துள்ளது. என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு என தொடங்கும் இப்பாடல் இன்றுவரை பல இளைஞர்களின் ரிங்டோனாக ஒலித்து வருகிறது.
இத்தொடரில் நாயகியாக நடித்திருந்த நடிகை சந்திரா லக்ஷ்மணன் 2002ஆம் ஆண்டு வெளியான மனசெல்லாம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில் படத்தில் நடித்த இவர், பல்வேறு மலையாளப் படங்களிலும், மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார்.
ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை சீரியலுக்கு பின்னர் தான் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் சந்திரா. குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார். இந்த சீரியல் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்றும் கூட பலரும் இந்த சீரியலின் டைட்டில் சாங்கை முணுமுணுத்து வருகின்றனர்.
சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த சந்திரா தற்போது ஸ்வந்தம் சுஜாதா என்ற மலையாள நிகழ்ச்சி மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை சந்திரா கூறியுள்ளார். வேறொன்றும் இல்லை அது அவரது திருமணம் குறித்த தகவல் தான்.
தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகர் தோஷ் கிறிஸ்டியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக சந்திரா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தோஷ் கிறிஸ்டியின் கைகளை பிடித்தவாறு புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர் “எங்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடனும் ஆசிர்வாதத்துடனும் ஒரு புதிய பயணத்தை தொடங்க இருக்கிறோம். எங்கள் நலம் விரும்பிகளான உங்களை எங்கள் மகிழ்ச்சியில் சேர்க்க விரும்புகிறோம்.
என் திருமணம் பற்றிய எல்லையற்ற கேள்விகளுக்கு இது முற்றுப்புள்ளியாக இருக்கும். எங்களை ஆசீர்வதியுங்கள். எங்களுக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.