திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

எடுத்தது ஒரே ஒரு படம்.. அதற்குள் ஆடி கார் வாங்கிய அசோக் செல்வன் பட இளம் இயக்குனர்

இப்போதெல்லாம் சினிமா வியாபாரம் என்பது கோடிகளில்தான். அதிலும் ஒரு படம் எக்கச்சக்கமாக வசூல் செய்து விட்டால் அடுத்த படத்திற்கு இயக்குனர்கள் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி விடுகின்றனர்.

முன்னரெல்லாம் நடிகர்கள்தான் சம்பளத்தை இஷ்டப்படி ஏற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது இயக்குனர்களும் அந்த வழியை கடைபிடித்த ஆரம்பித்துவிட்டனர். சரி, சினிமாவில் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

அப்படி ஒரே ஒரு படம் எடுத்த இளம் இயக்குனர் ஒருவர் சமீபத்தில் ஆடி கார் வாங்கியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே.

இளம் தலைமுறையினரின் காதலை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் மற்றும் ரித்திகா சிங் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் இளம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்ப்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து என்ற இளம் இயக்குனர் இயக்கியிருந்தார். தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

தெலுங்கு பதிப்பையும் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து என்பவர்தான் இயக்குகிறார். தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்கிறார்கள். இதனால் சமீபத்தில் ஆடி கார் வாங்கிய புகைப்படங்களை வெளியிட்டு மற்ற இளம் இயக்குனர்களை வயிறு எரிய வைத்துள்ளார்.

aswath-marimuthu-cinemapettai
aswath-marimuthu-cinemapettai

Trending News