புதன்கிழமை, ஜனவரி 15, 2025

47 வயதிலும் இளமையாக இருக்கும் கஸ்தூரி.. வைரலாகும் செல்ஃபி புகைப்படம்

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளுள் ஒருவர் கஸ்தூரி. இவர் அன்றைய கால நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த கஸ்தூரி தற்போது ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்களுக்கு பெரிய அளவு வரவேற்பு இல்லாவிட்டாலும் சமூக வலைதள பக்கத்தில் இவர் எப்போதும் ஆக்டிவாக ரசிகருடன் உரையாடுவது பல இயக்குனர்களும் கஸ்தூரிக்கு தங்களது படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.

என்னதான் கஸ்தூரி படங்களில் நடித்தாலும் அவ்வப்போது சமூகம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கும், தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதாலும் பலராலும் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தற்போதுவரை தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவருகிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தமிழரசன் மற்றும் உன் காதல் இருந்தால் இந்த 2 திரைப்படத்திலும் கஸ்தூரிக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் கொடுத்துள்ளதாக இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

kasthuri
kasthuri

கஸ்தூரி எப்போதும் அவரது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவதே வாடிக்கையாக வைத்திருப்பார் தற்போது அதேபோல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அப்போவே படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வயசிலும் நீங்க அழகாகத்தான் இருக்கிறீர்கள், லுக்கிங் சோ க்யூட் மற்றும் வாவ் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News