சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சந்தானத்துக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள் பயப்படுறாங்க.. ஓபன் ஆக சொன்ன இயக்குனர்

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். காமெடியனாக அவருக்கு கிடைத்த வரவேற்பு ஹீரோவாக கிடைத்ததா என்றால் இன்னமும் சந்தேகம்தான்.

இடையில் A1, தில்லுக்கு துட்டு போன்ற வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் இன்னும் அவரை முழுமையான ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவரும் காமெடியன் பிம்பத்தை உடைத்து ஹீரோவாக மக்கள் மனதில் நிலைக்கப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

மற்ற முன்னணி நடிகர்களை போல தன்னுடைய படங்களில் காதல், ரொமான்ஸ், சண்டைக்காட்சி, காமெடி என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் தான் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அது யாரையுமே தவறவில்லை இல்லை என்பதுதான் சோகமான விஷயம்.

தற்போது இதையெல்லாம் அடுத்ததாக zee5 என்ற ஓடிடி தளத்தில் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் டிக்கிலோனா திரைப்படம் மாற்றும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறாராம் சந்தானம். அந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் யோகி என்பவர் இயக்கியிருக்கிறார்.

இவர் சமீபத்தில் ஒரு நாளிதழுக்கு பேட்டி கொடுக்கும்போது, சந்தானத்துடன் ஜோடியாக நடிக்க நடிகைகள் ஆர்வமாக இல்லை என்பதை ஓபனாக தெரிவித்தது சந்தானம் தரப்பை அதிர்ச்சியாகி உள்ளதாம்.

சந்தானத்தை இன்னும் சினிமாவில் நடிக்கும் இளம் நடிகைகளே ஹீரோவாக ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், டிக்கிலோனா படத்திற்காக பல நடிகைகளிடம் கேட்ட போதுதான் அந்த விஷயம் புரிந்தது எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இலைமறைக்காயாக சொல்ல வேண்டிய விஷயத்தை ஓபன் ஆக போட்டுடைத்ததால் சந்தானம் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம்.

santhanam-karthikyogi-cinemapettai
santhanam-karthikyogi-cinemapettai

Trending News