ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பொற்காலம் படத்திற்கு சேரன் வாங்கிய சம்பளம்.. தேசிய விருது வாங்காமல் போன காரணத்தை ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்

சமீபத்திய சந்திப்பில் தயாரிப்பாளர் ஞானவேல் சில சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார் அதனை சற்றே விபரமாக பார்க்கலாம்.

தயாரிப்பாளர் ஞானவேல் 90களில் ஓரளவு பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில் இயக்குனர் நடிகர் பாண்டியராஜன் குறித்தும் இயக்குனர் சேரன் குறித்தும் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

1997-ல் பார்த்திபன் மீனா நடிப்பில் பாரதி கண்ணம்மா படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார் இயக்குனர் சேரன். படம் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேலுவுக்கோ இப்படி ஒரு படம் பன்ன வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசையும் கூட. அப்போதைய கால கட்டம் என்பது செல்போன் அந்த அளவு பயன்பாட்டில் இல்லை ஏதோ ஒரு சிலரிடம் இருக்கும் அதே போல இயக்குனர் சேரனிடமும் இல்லை எனறும் குறிப்பிட்டார்.

v gnanavel
v gnanavel

அவரை தேடிப்பிடிக்கவே படாத பாடு பட்டாராம் ஞானவேல் பிறகு ஒரு வழியாக கண்டுபிடித்து தனக்காக ஒரு கதை தயார் செய்யும் படி கூறினாராம் அப்போது அவர் ஒரு கதை கூற அந்த கதையில் நாட்டம் இல்லாமல் போகவே அதனை கைவிட்டாாராம் சேரன்.

பிறகு மண் குதிரை என்கிற தலைப்பில் ஒரு கதை கூறினாராம் சேரன் கதை மிக அருமையாக உள்ளது. ஆனால் தலைப்பில் மட்டும் மாற்றம் வேண்டும் என கேட்க உடனே பொற்காலம் என்கிற தலைப்பி் தயார் செய்தாராம் கதையை அதுதான் முரளி மீனா சங்கவி மணிவன்னன் நடிப்பில் 1997-ல் வெளிவந்த பொற்காலம்.

குயவர்களின் வாழ்வியலை அழகாக சித்தரிக்கும் இப்படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் தனது அற்புதத்தை பிரதிபலிக்கும். இந்த படத்திற்கு சம்பளமாக சேரனிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றதாம் தயாரிப்புக்குழு ஆனால் தயாரிப்பு குழு நிர்ணயம் செய்ததோ 15லட்சங்களாம் ஆனால் சேரன் 10 லட்சங்கள் தான் கேட்டாராம்.

கடைசியாக 8.5லட்சங்களை ஊதியமாக பேசி முடித்ததாம் தயாரிப்பு குழு.அதில் சிறிது வருத்தம் காட்டிய தயாரிப்பாளர் ஞானவேலு நாங்கள் சரியான வழியில் முயற்ச்சி எடுத்திருந்தால் நிச்சயம் இப்படத்திற்கு ஒரு தேசிய விருதேனும் வாங்கி கொடுத்திருக்க முடியும் என்று கூறினார்.

சப்டைட்டில் என படத்தில சில மாறுதல்கள் செய்து படத்தைை அனுப்பி இருந்தால் நிச்சயம் படம் தேசிய விருது ஒன்றை வென்றிருக்கும் என்றார்.

Trending News