இன்றும் திரையுலக ஜோடிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்றால் அது சூர்யா ஜோதிகா தான். இருவரும் ஆசையாய் ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அஜித் ஷாலினிக்கு பிறகு இவர்களது நட்சத்திர ஜோடி தான் ரசிகர்களை கவர்ந்தது.
சமீபகாலமாக ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கமர்சியல் படங்களை சுத்தமாக ஒதுக்கிவிட்டார். அதற்கு உதாரணமாக மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் பின்னாளில் அதிலிருந்து விலகினார்.
36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகாவுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து அது மாதிரி நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அவருக்கு சப்போர்ட் செய்யும் வகையில் சூர்யா ஜோதிகாவின் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகா நடிப்பில் அடுத்ததாக உடன்பிறப்பே என்ற திரைப்படம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது.
சினிமாவில் பல வருடங்களாக இருந்தாலும் சமூக வலைதள பக்கம் தலை காட்டாமல் இருந்த ஜோதிகா முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிமாலயா சென்ற புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய அக்கவுண்டை ஒபன் செய்துள்ளார்.
அவர் ஹிமாலயா சென்ற டிரிப் போட்டோக்களை சூர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து என் பொண்டாட்டி வலிமையானவன் என்று கூறியுள்ளார். மேலும் ஜோதிகா இன்ஸ்டாகிராம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் பாலோயர்களை கடந்து விட்டார் என்பது கூடுதல் தகவல்.