சமையல் நிகழ்ச்சிகளை இவ்வளவு சுவாரஸ்யமாக கொடுக்க முடியுமா? என அனைவரும் யோசித்த நேரத்தில் அசால்டாக காமெடி கலந்து டிஆர்பியை அள்ளி கட்டியது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி மூலம் இப்போது தமிழ் சினிமாவில் எத்தனை ஸ்டார் நடிகர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் புகழ், சிவாங்கி, அஸ்வின் போன்றோரை பற்றி சொல்லித்தானே ஆகவேண்டும்.
என்னதான் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் பங்கு பெற்றாலும் அந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கு பெறுபவர்கள் அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அதை வெங்கடேஷ் மற்றும் செப் தாமு இருவரும் அருமையாக கையாளுகின்றனர்.
போட்டியாளர்களுடன் சக நண்பர்கள் போல் பேசி கோமாளி குழுவுடன் சேட்டை செய்து என அந்த நிகழ்ச்சியை கோலாகலம் தான். தற்போது யூடியூப் சேனல்கள் தொடங்குவது அதிகரித்து வருவதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்த வெங்கடேஷ் பட் தன்னுடைய பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்து தனக்கு தெரிந்த சமையல் கலையை சொல்லி வருகிறார். இந்த சேனலுக்கு பல பெண் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் சமைக்கும் போது கையில் கயிறு எதற்கு, கேட்டா பெரிய செப் என்று நக்கலாக கிண்டலடித்தார். இதை பார்த்த வெங்கடேஷ் பட், அப்படிப் பார்த்தால் உண்மையில் சமைக்கும் போது யாருமே பேச கூடாது, ஆனால் நிகழ்ச்சி என்று வரும்போது அதை எல்லாம் பார்க்க முடியாது.
கையில் கயிறு கட்டுவதெல்லாம் என்னுடைய நம்பிக்கை, நீங்கள் பார்க்க வேண்டியது என்னுடைய திறமையைத் தானே தவிர கையில் கட்டியிருக்கும் கயிறை அல்ல எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக பிரபலங்கள் பலரும் தங்களை சமூகவலைதளத்தில் கேலி செய்தால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உடனடியாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.