வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சந்தோஷ் நாராயணனை நீக்கிவிட்டு மூத்த இசையமைப்பாளருடன் கூட்டணி சேர்ந்த பா ரஞ்சித்.. இனி அதிரடிதான்!

கடந்த சில வாரங்களாக கோலிவுட் வட்டாரங்களில் அதிகம் பேசப்படுவது சந்தோஷ் நாராயணன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் பிரிவு தான். சந்தோஷ் நாராயணன் செய்த சில விஷயங்கள் பா ரஞ்சித்துக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்ததால் இருவருக்குள்ளும் மனக்கசப்பு வந்ததாக தெரிகிறது.

பா ரஞ்சித் படங்களில் பிரதான இசையமைப்பாளராக இருப்பது சந்தோஷ் நாராயணன் தான். எவ்வளவு பெரிய முன்னணி நடிகரை வைத்து படம் எடுத்தாலும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் தான் வேண்டும் என அடம் பிடித்து பணியாற்றி வந்தார்.

ஏன் சமீபத்தில் பா ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் இசை கூட ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் இருவருக்குள்ளும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் பாடலாசிரியர் அறிவு விஷயத்தில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் பிரச்சினை முற்றிய இனி வரும் படங்களில் இருவரும் பணியாற்ற போவதில்லை என முடிவெடுத்து விட்டார்களாம்.

இதனால் இனி பா ரஞ்சித் எந்த இசையமைப்பாளருடன் கூட்டணி சேருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மூத்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுடன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பணியாற்றப்போவதாக முடிவெடுத்துள்ளாராம் பா ரஞ்சித்.

இதனால் பா ரஞ்சித் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. அந்த வகையில் பா ரஞ்சித் அடுத்ததாக நட்சத்திரம் நகருகிறது என்ற படம் எடுத்து வருகிறார்.

ilayaraja-cinemapettai
ilayaraja-cinemapettai

Trending News