செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

பூஜையுடன் அதிரடியாக தொடங்கிய 32வது படம்.. நண்பருக்காக விஷால் எடுத்த முடிவு

தெலுங்கில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஷால். ஒரு அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக தற்போது வரை வலம் வரும் நடிகர் விஷாலின் படங்களில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவிற்கு இவரது படங்களில் அதிரடி சண்டைக்காட்சிகளும், பஞ்ச் டயலாக்குகளும் இடம்பெற்றிருக்கும். இதற்காகவே இவருக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

சமீபகாலமாக விஷால் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. எனவே இனிவரும் படங்களை நிச்சயம் வெற்றிப் படங்களாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் விஷால் தற்போது இறங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து வீரமே வாகை சூடும் என்ற படத்தில் விஷால் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் விஷாலின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து எனிமி மற்றும் வீரமே வாகை சூடும் படங்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விஷால் தனது 32வது படத்தை பூஜையுடன் தொடங்கி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்க உள்ளார். இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணா மற்றும் நந்தா தயாரிக்க உள்ளனர். இப்படத்தை தயாரிப்பதற்காக ராணா என்ற தயாரிப்பு நிறுவனத்தை ரமணாவும், நந்தாவும் கூட்டாக தொடங்கியுள்ளனர்.

vishal
vishal

தனது நண்பர்களுக்காக இப்படத்தில் நடிக்க நடிகர் விஷால் ஒப்புக்கொண்டு உள்ளார். மேலும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்க உள்ளார். இவர் முன்னதாக ஏற்கனவே சமீர் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷாலுடன் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மிகவும் சிறிய பட்ஜெட்டில் இப்படம் தயாராக உள்ளது.

Trending News