ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

என்னது 25 லட்சமா? வந்ததே இதான்யா.. பீதியை கிளப்பியதால் உண்மையை ஒப்புக்கொண்ட புகழ்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் குக் வித் கோமாளி புகழ். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியில் இவர் செய்த சேட்டைகள் மூலம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றார்.

அதிலும் குறிப்பாக புகழ் மற்றும் சிவாங்கி இருவரும் இணைந்து செய்யும் சேட்டைகள் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. அதனை அப்படியே இருவரும் பயன்படுத்திக் கொண்டனர். தற்போது ரசிகர்களிடம் பிரபலமாக இருக்கும் இவர்கள் தற்போது ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி புகழ் அமேசான் தளத்தில் எங்க சிரிங்க பார்ப்போம் எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். பவர் ஸ்டார் சீனிவாசன், சதீஷ்குமார் மற்றும் பிரேம்ஜி போன்ற பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இதில் யார் இறுதிவரை சிரிக்காமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு தொகையாக 25 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை 6 எபிசோடுகள் ஆக அமேசான் தளத்தில் வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கடைசிவரை குக் வித் கோமாளி புகழ் மற்றும் அபிஷேக் இருவரும் கடைசிவரை சிரிக்காமல் இருந்தனர்.

இறுதியாக இருவரும் வெற்றி பெற்றதாக அறிவித்து 25 லட்சத்தை பிரித்துக் கொடுத்துள்ளனர். அதில் குக் வித் கோமாளி புகழுக்கு 12.5 லட்சம் கிடைத்துள்ளது. இறுதியாக வரி போக அவருக்கு 7 லட்சம் கைக்கு வந்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த 7 லட்சத்தையும் வீடு கட்டுவதற்காக தன் வீட்டிடம் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Trending News