புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மணிரத்தினத்திற்கு போட்டியாக களம் இறங்கும் சௌந்தா்யா ரஜினிகாந்த்.. மாஸாக வெளிவந்த அப்டேட்.!

கடந்த1899ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் வெளியானது தான் பொன்னியின் செல்வன் நாவல். இந்நாவல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதனை பலரும் படமாக எடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அவை அனைத்தும் பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இந்த முயற்சியை முழுவதுமாக கையில் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது பாகுபலி படத்தைப் போலவே இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரபு உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்காக தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை வெப் தொடராக இயக்கும் முயற்சியில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இறங்கியுள்ளார். இந்த தொடருக்கு புதுவெள்ளம் என்று பெயர் வைத்துள்ளார். பொன்னியின் செல்வன் முதல் பகுதி ஸ்கிரிப்ட் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு தற்போது நிறைவடைந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி அன்று இந்த வெப் தொடருக்கான அறிவிப்பை செளந்தர்யா வெளியிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டே பொன்னியின் செல்வன் வெப் தொடரை இயக்க உள்ளதாக சௌந்தர்யா அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அது தள்ளி சென்றது. அதற்குள் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.

soundarya-rajinikanth
soundarya-rajinikanth

தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகும் பொன்னியின் செல்வன் கதையை வெப் தொடராக, இயக்குனர் ஷங்கரிடம் பணியாற்றிய சரத்குமார் ஜோதி இயக்க உள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சௌந்தர்யா அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

soundarya-ponniyan-selvan
soundarya-ponniyan-selvan

Trending News