ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

குக் வித் கோமாளி பிரபலத்தின் மனதை உருக்கிய பதிவு.. விஜய் டிவி ரசிகர்களை துயரில் ஆழ்த்திய அந்த நாள்!

விஜய் தொலைக்காட்சி மூலம் பலர் திரையுலகிற்கு அறிமுகமாகி, தற்போது முன்னணி நட்சத்திரமாக வலம் வருவதை அனைவரும் அறிவோம். அந்த வகையில் வடிவேல் பாலாஜியும், விஜய் தொலைக்காட்சி மூலமாக  பிரபலமானவர். இவர் கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு, அது இது எது, ஜோடி நம்பர் ஒன், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்.

இவர் நிகழ்ச்சிகளில் மட்டுமன்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா, முனி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு 24ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடுமையான சிக்கல்கள் உடம்பில் இருந்தது.

அதன் காரணமாக செப்டம்பர் 10 அன்று காலமானார். இவர் இல்லாதது ரசிகர்களின் மனதில் பெரிய குறையாகவே இருக்கிறது. இறக்கும் வயதா இவருக்கு? என்று ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். வடிவேல் பாலாஜி இறந்து ஒரு வருடம் ஆகும் நிலையில்,

குக் வித் கோமாளி புகழ் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. ‘பிறரை மகிழ வைத்து பார்ப்பதே கடமையாகக் கொண்டவரே. இப்போது அனைவரையும் அழ வைத்துவிட்டு விட்டீரே’ என்று கவலையுடன் புகழ் பதிவிட்டுள்ளார்.

kpy-pugazl-cinemapettai
kpy-pugazl-cinemapettai

மேலும் அவர், ‘பிறரின் திறமையை பாராட்டி அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்தவர் என்றும் மண்ணை விட்டு பிரிந்தாலும் என் மனதில் என்றும் வாழ்வாய் மாமா என்றும் நான் அறியாதவற்றை எனக்கு கற்பித்தவர்,

என் உயிருள்ளவரை உன்னுடன் இருந்த நினைவுகள் எதையும் என் மனம் மறக்காது. மிஸ் யூ மாமா’ என்று புகழ் கூறியது காண்போர் மனதை உருக்கி உள்ளது. மேலும் வடிவேல் பாலாஜியின் நினைவு தினத்தன்று விஜய் டிவி பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் அவரது  நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

- Advertisement -

Trending News