திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மேடையில் விஜய் அப்பாவின் புகழ் பாடிய பிக்பாஸ் பிரபலம்.. ஹீரோயினாக நடிக்க என்னென்ன பேச வேண்டியிருக்கு

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இசையில், சமுத்திரக்கனி கதாநாயகனாக, சரவணன் வில்லனாகவும் நடிக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை”.  இந்த திரைப்படத்தின் பிரஸ்மீட் தற்போது நடைபெற்றது. அப்பொழுது அப்படத்தின் நாயகி சாக்ஷி, தளபதியின் தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரை மிகவும் புகழ்ந்து  பேசியுள்ளார்.

இந்த மாதிரி டைரக்டரை பார்க்கவே முடியாது. ரொம்ப இன்ஸ்பிரேஷன் இருப்பாரு, படப்பிடிப்பின் போது ரொம்ப எனர்ஜியாகவே இருப்பாரு, கேப்மாரி படத்திற்கு என்னை அழைத்த போது என்னால் வர முடியவில்லை, அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

இத்திரைப்படம் ஃபேமிலி சென்டிமென்ட் ரொம்ப எனர்ஜிடிக் ஆன திரைப்படம். இது அவரின் 71 வது திரைப்படம், ஆனால் அவருடைய முதல் திரைப்படம் போல் பணியாற்றியுள்ளார். ECR ரோட்டில் நானும் சமுத்திரக்கனி சாரும் ஓடுவோம் எங்களுடனே எஸ்.ஏ.சி சாரும் ஓடி வருவார்.

இந்த வயதிலும் இவ்வளவு எனர்ஜியாக உள்ளார். துப்பாக்கி வைத்து ஒரு சீன் இருக்கும் அதை அவரே நடித்து காண்பித்தார் நான் பிரமித்து போனேன். செட்டில் உள்ள அனைவரும் கைதட்டினர்.

shakshi-aggarwal-cinemapettai-4
shakshi-aggarwal-cinemapettai-4

துப்பாக்கியை என் நெற்றியில் வைக்கும் போது ரத்தம் வந்தது அப்போது அந்த சீனை முடித்துவிட்டு தான் பார்த்தார், அதன் பின்பு ஐஸ் கட்டி  கொண்டு அவரே முதல் உதவி செய்தார். தமிழ் சினிமாவின் லெஜெண்ட்ரி டைரக்டர் என்று தளபதியின் தந்தையை புகழ்ந்து தள்ளியுள்ளார் பிக் பாஸ் நடிகை சாக்ஷி.

Trending News