திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இளம் நடிகைகளே தோற்று போயிடுவாங்க.. குஷ்புவை பக்கம் பக்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்!

90களில் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டி இந்திய சினிமா நடிகைகளை வியக்க வைத்தவர்கள் அவரின் ரசிகர்கள். நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் சின்னத்திரைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் குஷ்பு.

சின்னத்திரையில் சீரியல்களை தயாரித்து நடித்து வருகிறார். ஆனால் பல நாட்களாக உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் குஷ்பூ ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிட்டத்தட்ட தனது 18 கிலோ உடல் எடையை முற்றிலும் குறைத்து இளம் நாயகி போல் மாறியுள்ளார் குஷ்பு. சமீபத்தில் அவரது மகளும் உடல் எடையை குறைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் காட்டு தீ போல் பரவின. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து ரஜினி கமல் படங்களில் நடிக்க உடல் எடையை குறைத்தால் சுலபமாக வாய்ப்பு கிடைக்கும் என பிளான் பண்ணியுள்ளாராம்.

அவருடைய சமீபத்திய செல்பி புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மான உடற்கட்டுடன் சுடிதார் அணிந்துகொண்டு குஷ்பு எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் மெய்மறந்து பார்க்கின்றனர்.

kushboo-1-cinemapettai
kushboo-cinemapettai

இந்த புகைப்படத்தில் இளம் கதாநாயகியாகவே காட்சியளிக்கிறார் இதைப் பார்த்த ரசிகர்களும் குஷ்புவை பக்கம் பக்கமாக சோசியல் மீடியாவில் வர்ணிக்கின்றனர்.

அத்துடன் கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய உடல் பருமனால் அம்மா அக்கா கதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த குஷ்பூ, தற்போது ஸ்லிம்மாக மாறி உள்ள நிலையில் அவர் கதாநாயகியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இவருடைய சமீபத்திய செல்பி புகைப்படம் அந்த அளவிற்கு க்யூட்டாக உள்ளது.

Trending News