வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

படு கிளாமரான கனா காணும் காலங்கள் பிரபலம்.. இப்போ இவங்க டாக்டராம்!

90ஸ் கிட்ஸ்களின் பிடித்தமான தொடராக இருந்தது மட்டுமல்லாமல் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற விட்ட தொடர் தான் கனா காணும் காலங்கள். இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை, கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என அடுத்தடுத்து வரிசையாக விஜய் டிவி ஒளிபரப்பு செய்தது.

இந்த தொடர்களும் ரசிகர்களின் ஆதரவை பெற்று மாபெரும் வெற்றியை கண்டது. மேலும் இந்த  தொடர்களில் நடித்த நடிகை நடிகைகள் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் ஜொலித்தது கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல்களில் நடித்தவர்களை வைத்தே வெள்ளித்திரையில் பட்டாளம் என்ற படம் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி கண்டது. இவ்வாறு இளசுகளின் மனதை வென்ற கனா காணும் காலங்கள் சீரியலில் சங்கவி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மோனிஷாவின் தற்போதைய நிலை தெரியவந்துள்ளது.

இந்த சீரியலில் நடித்த பிறகு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது இருப்பினும் இவர் ஒரு சில படங்களிலும் சீரியல்களிலும் விஜய் டிவியில் நடைபெற்ற ஜோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

monisha-cinemapettai
monisha-cinemapettai

பிறகு படிப்பில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். தற்போது மோனிஷா பல் மருத்துவராக பணிபுரிகிறார். மேலும் இவர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடலாம்.

சமீபத்தில் இவர் கடற்கரையில் படு கிளாமரான உடையில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மோனிஷாவை பக்கம் பக்கமாக வர்ணித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News