திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

குக் வித் கோமாளி பிரபலத்தை குத்தகைக்கு எடுத்த தயாரிப்பாளர்கள்.. குவியும் பட வாய்ப்புகள்.!

தமிழ் சினிமாவில் நடிகராக நடிக்க வேண்டும் என பலரும் நினைப்பதுண்டு. ஆனால் அதில் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்து இன்று வரை நடிகராக நிலைத்து நிற்கின்றனர். குக் வித் கோமாளி அஸ்வின் குறும்படங்கள், வெப்சீரிஸ் மற்றும் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெறாத அஸ்வின் குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அதனால் தற்போது ஒரு சில தயாரிப்பாளர்கள் அஸ்வின் வைத்து படங்களை தயாரிக்க முன் வந்துள்ளனர்.

டிரைடன் ரவி என்பவர் அஸ்வின் வைத்து பல படங்களை தயாரிக்க முன்வந்துள்ளார். அதனால் சினிமா வட்டாரத்தில் இருப்பார்கள் பலரும் அஸ்வினை டிரைடன் ரவி குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறி வருகின்றனர். ஏனென்றால் அந்த அளவிற்கு இவரது தயாரிப்பில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமில்லாமல் அஸ்வின் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். முதலில் பிரபுசாலமன் மகன் தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என கூறிவந்தனர். ஆனால் தற்போது அஸ்வின் ஹீரோவாகவும் பிரபுசாலமன் மகன் 2வது ஹீரோவாகவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியலாக எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா மற்றும் கோவை சரளா இருவரும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இருவரிடமும் இப்படத்தில் நடிப்பதற்கு 40 நாள் கால்ஷீட் பிரபுசாலமன் கேட்டுள்ளார். அதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் படத்தில் அஸ்வின் ஹீரோவாக இருந்தால் அவர்தான் 40 நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டும். அப்புறம் ஏன் பிரபுசாலமன் இவர்களிடம் 40 நாள் கால்ஷீட் கேட்டுள்ளார் கூறி வருகின்றனர்.

Trending News